Wednesday, August 03, 2011

திரியாய் தமிழ்க் கிராமத்தில் சிங்களவர்களை குடியேற்ற முயற்சி!

திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திரியாய் என்ற தமிழ்க்கிராமத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு புனித நகராக்கும் திட்டம் என்ற பெயரில் 3000 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மொத்தமாக 3069 ஏக்கர் 2 றூட் 15 பெர்ச்சஸ் காணி இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளது.

திரியாயில் புனித பிரதேசம் என்ற பெயரில் இவ்வளவு காணியை ஒதுக்குவதை நிறுத்தும்படி திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

திரியாயில் உள்ள பௌத்த விகாரையின் பெயர் கிரிஹந்துசேயா ஆகும். இவ்விகாரைக்கு தெற்கு பகுதியிலிருந்து பௌத்தர்கள் யாத்திரை வந்து விட்டு திரும்பிச் செல்வது வழக்கமாகும். திரியாயில் பௌத்த சிங்களவர்கள் குடியிருக்கவில்லை. புனித பிரதேசம் என்ற பெயரில் காணிகளை ஒதுக்கி அதில் தெற்கிலிருந்து சிங்களவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தமிழ் வட்டாரங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.