தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்கவில்லை என யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறுகையில்,இராணுவத்தினர் வழமைபோல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கூட்டம் ஒன்று நடப்பதை அவதானித்தனர். என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்த முடியாது என இராணுவத்தினர் கூறினர். அபபோது எம். பிக்களின் மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றார்.
இப்பகுதியில் எந்தக் கட்சியும் கூட்டம் நடத்துவதில் எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை. இப்பகுதியில் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். எனவே இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை இராணுவம் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நேற்றைய தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராசா யாழ்.கட்டளைத் தளபதியிடம் முறைப்பாடு செய்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.