Friday, June 17, 2011

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகப் போகிறாராம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டியிட விரும்புவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் வட மாகாண சபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றுக்கு அமைய வடக்கும் கிழக்கும் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டாலும் வடமாகாணத்திற்கு இதுவரை மாகாண சபையொன்று அமைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு 2008 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடனா இத்தேர்தலில் போட்டியிடுவீர்கள் எனக் கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.