Friday, June 17, 2011

அளவெட்டி தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டமைப்பு ஜனாதிபதிக்குக் கடிதம்

யாழ்ப்பாணத்தில் நேற்று தம்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய தரப்பினருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், இ.சரவணபவன், எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையொப்பமிட்டு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். தாக்குதல் குறித்து யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் யாழ் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணு சீருடை அணிந்தவர்களே தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதுவொரு திட்டமிட்ட செயல் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதல் காரணமாக தமது அரசியல் செயற்பாடுகளை முடக்க சிலர் முயற்சித்துள்ளதாகவும் யாழ் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, தேர்தல்கள், ஆணையாளர் நாயகம், சபாநாயகர், பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.