Friday, June 17, 2011

காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரக்கூடாது : சுப்பிரமணியசாமி பேட்டி

மதுரையில் ஜனதாதள கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டை உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஊழலில் தொடர்புடைய பலரும் கைதாக உள்ளனர். மேலும் சில மத்திய மந்திரிகளும் கைதாவார்கள். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழல் அரசாக உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஊழல் நிறைந்த கட்சியாகிவிட்டது.
எனவே இனிவரும் காலங்களில் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கக் கூடாது. முல்லை பெரியாற்றில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.