அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 100 இலங்கையர்கள் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கையின் உண்மை நிலையினை விளக்கியுள்ளதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப்பாடு குறித்தும் எடுத்துக் கூறினர்.
அமெரிக்க - இலங்கையர் தினமான திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனுசரணையுடன் அமெரிக்க செனட்டர்களை சந்திக்கும் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் எல். ரி. ரி. ஈயை அடிபணிய வைத்த பின்னர் நாடு பொருளாதார மற்றும் சமூக விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி அவர்கள் அமெரிக்க செனட்டர்களுக்கு ஆதாரபூர்வமாக விளக்கி கூறினார்கள்.
இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைப்பின் இணைத்தலைவரான ரொபட் எடர் ஓல்ட் அங்கு கருத்து தெரிவிக்கையில், 2004 சுனாமி அனர்த்தத்தை அடுத்து தாம் இலங்கைக்கு சென்று அங்கு ஏற்பட்ட பேரழிவை அவதானித்ததாக சொன்னார். இன்று இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைந்திருப்பதனால் இன்று நான் இலங்கைக்கு சென்றால் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பார்த்து சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி கூட அடைய முடியுமென்று தெரிவித்தார்.
செனட் சபையின் மத்திய கிழக்கு, தென்கிழக்காசிய உப குழுவுக்கு தலைமை தாங்கும் ஹெண்டர் ஹோல் மற்றும் ஸ்டீவ் சார்பொட் ஆகியோர் புலம்பெயர்ந்து சென்ற இலங்கையருடன் பகற் போசனத்திலும் கலந்து கொண்டனர். கடந்த திங்களன்றே அமெரிக்காவில் முதற்தடவையாக இலங்கை, அமெரிக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னர் மேற்கொண்டுவரும் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் நிரந்தர சமாதானத்தை நிலை பெறச் செய்வதற்காகவும் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு விடுக்குமாறு அமெரிக்க செனட்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.