Friday, June 17, 2011

ஐ.நா க்கு யுத்த ஹெலிகொப்ரர்களை வழங்கி தாஜா செய்ய முனைகிறது இலங்கை!

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மற்றும் சனல் 4 இன் ஆவணப்படம் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்துள்ளது. இந்நிலையில் கொங்கோ, ருவாண்டா மற்றும் சூடான் போன்ற நாடுகளிலுள்ள ஐ.நா அமைதிப்படையினருக்கு யுத்த ஹெலிகொப்ரர்கள் தட்டுப்பாடாக இருப்பதாகவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவும் தாம் 3 எம்.ஐ-24 ரக ஹெலிகொப்ரகளையும் ஒரு சோடி ஃபிக்ஸ் விங் விமானத்தையும் அளிப்பதாக இலங்கை கூறியுள்ளதாம். இவற்றை ஐ.நா படைகளுக்கு வழங்கி தம்மீதான போர்க் குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணைகளை நடத்தாமல் விடுவதற்கு இலங்கை ஐ.நா வைத் தாஜா செய்கிறதோ என்னவோ?

ஆனால் இலங்கையின் இச்சலுகைகளை ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிகிறது. தற்போதுள்ள சூழலில் இலங்கையிடமிருந்து இவற்றைப் பெற்றால் அது சர்வதேச அளவில் தர்க்கத்துக்குரிய விடயமாகிவிடுமென ஐ.நா க்குத் தெரியாதா என்ன? இந்த ஹெலிகொப்ரர்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தியே 2009 இன் முதல் ஐந்து மாதங்களும் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு 40,000 உறவுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.