Sunday, June 12, 2011

சிவசங்கர்மேனன் பயணம் கண்துடைப்பு: காங்கிரஸ் அரசு இருக்கும்வரை இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது- பா.ஜ.க

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையிலான இந்திய குழுவினர் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு என்று தமிழக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

2009-ல் இலங்கை தமிழர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அறிவிக்கப்படாத யுத்தம் நடத்தியபோதும் இலங்கை அரசுக்கு துணையாக இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏறக்குறைய கட்சி பிரதிநிதிபோல் இலங்கை சென்று செயல்பட்டவர் சிவசங்கரமேனன். அவர் சென்ற பிறகுதான் வெளியே தெரியாமல் இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவித்தது.

அப்படிப்பட்ட சிவசங்கர மேனனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதால் பலன் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பது முட்டாள்தனம். தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படுத்துமா என்பது சந்தேகம். சட்டமன்றத்தில் எவ்வளவுதான் தீர்மானம் நிறை வேற்றினாலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.