Saturday, June 11, 2011

இந்தியக் குழு மஹிந்தவையும் சந்திக்கிறது!

இரண்டு நாள் உத்தியோக பூர்வ வியம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய உயர் மட்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று முற்பகல் வேளையில் இடம்பெறும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய குழுவினருக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று பகல் இலங்கை வந்த இந்த குழுவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிசை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது கச்சத்தீவு விடயம், இருநாட்டு மீனவர் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.