Friday, June 17, 2011

சனல் 4 ஆவணப்படத்தினை பிரிட்டனின் 8லட்சம் பேர் பார்த்தனர்! மூன் பார்க்கவில்லையாம்!

இலங்கையின் போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் சனல்4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தை பிரிட்டனில் 8லட்சம் பேர் பார்த்த போதும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை, ஆனால் ஒளிபரப்பப்பட்டவை குறித்து அறிந்துள்ளார் என்று பான் கீமூனின் பேச்சாளர் மார்டின் கெசர்கி தெரிவித்தார்.

நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார். ஆய்வின் பின்னர் அறிக்கை குறித்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பார் எனவும் பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்தார்.ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் பரிந்துரைகளை முன்வைக்க முடியும்.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், குற்றஞ் சாட்டப்பட்ட நாடு அல்லது உறுப்பு நாடுகளின் அனுமதி அவசியம். குறிப்பாக ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமை பேரவை ஆகியவற்றின் கோரிக்கையின் பேரில் விசாரணை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. பான் கீ முன் தனது நாட்காலியை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் போது மற்றவைகளுக்கு எங்கே நேரம் இருக்கும். இம் முறை இலங்கைக்கு உல்லாசபயணம் போகக் கூட முடியாத வேலைப்பளு. பாவம்

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.