Tuesday, May 24, 2011

சிறீலங்காவில் சீனாவின் ஆயுதக் கண்காட்சி

வன்னில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் 40,000 தமிழ் மக்களை சில வாரங்களில் படுகொலை செய்து போரை நிறைவு செய்த சிறீலங்கா அரசு, தான் போரில் ஈட்டிய வெற்றி குறித்து நடத்தும் மாநாட்டில் சிறீலங்காவின் நெருங்கிய நட்பு நாடான சீனா தனது ஆயுதங்களை பார்வைக்கு வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

சீனாவின் முன்னனி ஆயுத உற்பத்தி நிறுவனங்களான சீனா பொலி ரெக்னோஜிஸ் மற்றும் சீனா இலத்திரனியல் தொழில்நுட்ப கூட்டுத்தாபனம் ஆகியன தமது நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ள ஆயுதங்களை பார்வைக்கு வைத்கத்திட்டமிட்டுள்ளன என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா நேற்று (23) தெரிவித்துள்ளார்.

செய்மதித் தொலைதொடர்பு, நுன்மின்னலை, ஸ்கற்றர் தொலைதொடர்பு, ரெலி- கொன்றோல் உட்பட பல நவீன படைத்துறை தொழில்நுட்பங்கள் அங்கு கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

போர்க்குற்றங்களை மேற்கொண்ட இராணுவமாக ஐ.நாவினால் தரப்படுத்தப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினரால் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் பங்குபற்றுகின்றன.

40,000 தமிழ் மக்களை நீதிக்குப் புறம்பாக படுகொலையை மேற்கொண் சிறீலங்கா இராணுவத்தின் மாநாட்டில் இந்த நாடுகள் பங்குபற்றுவது அவற்றின் இரட்டை வேடத்தை அப்பலப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.