Tuesday, May 24, 2011

தமிழர்களின் ஜெயபுரம் கிராமத்தை "மகிந்த ராஜபக்ச மாவத்தை"யாக மாற்றும் மகிந்த!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகர் என வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் கிராமத்தில் வீதி ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகை நாட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன்கட்டு நேக்கி பிரயாணிக்கையில் ஜெயபுரம் சந்தைக்கு அருகாமையில் இருக்கும் இரண்டு வீதிகளில் ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயரும், மற்றைய வீதிக்கு ‘அழுத் மாவத்தை’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெள்ளை தீந்தை பூசப்பட்ட பலகையில் கறுப்பு மையால் பிரஸ்தாப வீதிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இன்னும் சில வீதிகளுக்கு வேறு பல சிங்களப்பெயர்கள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.சிறீலங்கா படைகள் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட போரின் பின்னர் தற்போது இவ் இரண்டு விடயங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளன.


கிளிநொச்சி உள் வீதிகளில் இவ் அடையாளங்களை இடுவதன் மூலம் தமிழ் ஊடங்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்களில் இருந்து இதை மறைத்து சிங்கள மயமாக்கலை மேற்கொள்ளும் இரகசிய திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த பெயர் பலகைகளை பாதுகாக்கும் நோக்கில் அவற்றிற்கு அருகில் சிறீலங்கா ஆக்கிரமிப்பு பொலிஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், பெயர் பலைகையை நிகழ்படம் எடுக்க முற்படும் பொதுமக்களும், பாதசாரிகளும் அவதானிக்கப்படுவதால் மக்கள் அஞ்சி அதை தவிர்த்து வருகின்றனர்.தமிழர்களின் ஜெயபுரம் கிராமத்தை "மகிந்த ராஜபக்ச மாவத்தை"யாக மாற்றி சிங்கள கிராமங்களாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசும் சிங்கள மக்களும் இணைந்து நடத்திவருகின்றனர்.


இது மட்டும் இல்லை தமிழர்களின் கடல் பகுதியிலும் இனவெறி சிங்களவர்கள் தற்பொழுது மீன் பிடியில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


யுத்தம் முடிந்து இரண்டு வருடம் தான் முடிவுற்றுள்ளது இப்பவே இந்நிலை என்றால்.இனிவரும் காலங்களில் சிறிலங்காவில் தமிழருக்கு என்று கிராமங்கள் இருக்குமா?


இந்நிலைகளை மாற்றுவதற்கு உலக நாடுகளில் வாழும் தமிழர்களும், ஐ.நாவும், உலக நாடுகளாலும் தான் முடியும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.