Monday, May 09, 2011

பான் கீ மூனுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் நட்பு நாடுகளான ரஸ்யாவும் சீனாவும் கவலை வெளியிட்டுள்ளன.ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டதன் பின்னரே இந்த கவலையை இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை கொச்சைப்படுத்துவது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்ற செயல்கள் தொடருமானால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் மறுபரிசீலனை செய்யவேண்டி வரும் என்று ரஸ்யாவும் சீனாவும் கூறியுள்ளன.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மீது மேற்கொண்டு வரும் எதிர்ப்பு அறிக்கைகளையும் கருத்துக்களையும் அரசாங்கம் குறைக்கவேண்டும்.

பான் கீ மூனின் உருவப்பொம்மை அண்மைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே ரஸ்யாவும் சீனாவும் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.