புல்லுக்கு இறைத்த நீரில் நெல்லுக்குப் பங்கு உண்டா?
தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மே 13ம் திகதி வரை நடைபெறும், அதாவது ஒரு மாதம் முற்றாக எண்ணும் பணி நடக்கும். முடிவுகள் 14ம் திகதி தெரியவரும்.
அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
அப்படியாயின் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. கருணாநிதி கட்சியினர் பதவி இழக்கத் தயாரில்லை. பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஜெயலலிதா பதவியேறினால் வஞ்சம் தீர்க்கத் தயங்க மாட்டார் என்பது நாடறிந்த விடயம்.
உளவுத் துறையினர் வழங்கிய தகவலின் படி கருணாநிதியின் கூட்டணி 94 தொகுதிகளை மாத்திரம் கைப்பற்றலாம் என்று தெரியவருகிறது. பதவியில் தொடர்வதற்காக வழமையான “குதிரை வியாபாரத்தில்” அவர் இறங்கிவிட்டார். உறுப்பினர்களை விலை பேசி வளைத்து போடும் பேரங்கள் தொடங்கி விட்டன.
கருணாநிதி இம்முறை பின்னடைவைச் சந்திப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது. அவர் மக்கள் பணத்தில் தனது குடும்பத்தை வளர்த்துள்ளார்.
ஈழப்பிரச்சினையில் அவர் ஆடிய நாடகம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம். மேடை தோறும் அவருடைய உண்ணாவிரதம் பற்றிய கேலிப் பேச்சு அமர்க்களப் பட்டது. எல்லாவற்றிற்க்கும் சிகரம் வைத்தாற் போல் ஆசை மகள் கனிமொழி அமைச்சர் ராசாவுடன் இணைந்து சுருட்டிய 214 கோடி ரூபா பற்றிய செய்தி அம்பலமாகிவிட்டது.
கடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்காக கருணாநிதி ஒரு உத்தியைக் கையாண்டார். நூறு குடும்பங்களைக் கவனிப்பதற்கு ஒரு தொண்டர் என்ற விகிதத்தில் முழுத் தேர்தல் தொகுதியையும் திமுக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
இந்தியாவை ஒரு கலக்கு கலக்கிய திருமங்கலம் “போமியுலா” என்ற தேர்தல் உத்திமூலம் பணப் பற்றுவாடா இலகுவாக்கப்பட்டது. இலஞ்சம் முறைப்படுத்தப்பட்டது. ஊழல் முறைகேடு நகாரீகமாகியது.
திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது. சட்டசபைத் தேர்தலில் இந்த உத்தியைக் கருணாநிதி பயன் படுத்துவதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் ஏறத்தாழப் பூரண வெற்றி பெற்றது. கருணாநிதியின் மகன் அழகிரி அரசாண்ட மதுரை மாவட்டத்தில் நிர்வாக மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் மாற்றஞ் செய்யப்பட்டனர்.
இரவு பகலாக தமிழ் நாடு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையும் தேர்தல் அதிகாரிகளும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படவிருந்த பல கோடி ரூபாய்களைப் பறிமுதல் செய்தனர். திருச்சியில் ஒரு பெண் அதிகாரி சங்கீதா வயது 33 நள்ளிரவில் கடத்தப்பட்ட 5 கோடியே 11 இலட்சத்து 27 ஆயிரம் லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிச் சாதனை படைத்தார்.
அதிமுகவினர் கைகளும் கட்டில் போடப்பட்டன. அவர்களால் பணமாகவும் பொருளாகவும் கொடுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகள் கூடுதலாகத் திமுகாவைப் பாதித்துள்ளன.
சீமானின் பிரசாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்காரர்களில் 10 பேர் வெற்றி பெற்றால் சாதனையாக இருக்கும்.கருணாநிதி வென்றால் என்ன ஜெயலலிதா வென்றால் என்ன ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் இலாபம் பூச்சியமே. ஜெயலலிதா வெளிப்படையான எதிரி. கருணாநிதி உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுயநலவாதி. வெளிப்படையான எதிரி எவ்வளவோ மேல்.
கருணாநிதியை விட அம்மையார் ஈழத்தமிழருக்கு துரோக செய்யாதே அவர்களின் உரிமை பெற்றுக்கொடு என்று துணிச்சலுடன் குரல் கொடுப்பார் என்று எல்லோராலும் நம்பப்படுகின்றது. வை.கோ, சீமான் போன்றோர் எண்ணிக்கை பன்மடங்காகும். அப்போது தனது பலத்தை அறிந்த புதிய தமிழகம் உதயமாகும்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.