Sunday, May 08, 2011

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவிக்கிறது-அமெரிக்கவை திசை திருப்பும் முயற்சியா!

பாகிஸ்தானில் உஸாமா பின்லேடன் இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் பாகிஸ்தானில் வைத்தே பின்லேடன் கொலை செய்யப்பட்டிருப்பதால், உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் உண்மைக்கு மாற்றமான செய்திக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இவ்வேளயில், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். இது போன்றே இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறும் போது, பின்லேடன் பிரச்சினையின் மூலம் இந்தியா ஆதாயம் தேட முயல்கிறது. இவ்வாறு இந்தியா செயல்பட்டால் நாங்கள் கடுமையான் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளார். இதே தொணியில் பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றன்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தனது படைகளை கொண்டு வந்து இந்திய எல்லையில் குவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 740 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிக அளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன். இதுபோல பனி படர்ந்த பகுதியாக உள்ள சியாச்சின் பகுதியில் 110 கிலோமீட்டர் தூரத்திற்கும் படைகளை பாகிஸ்தான் குவித்துள்ளது. இதனை இந்திய ராணுவ அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே எல்லைப் பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. பாகிஸ்தான் அத்துமீறும் போது அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய படைகளும் தயாராகி வருகின்றன.

உஸாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளதால், அமெரிக்கா பாகிஸ்தானை நம்பாமல், உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி நடைபெற்றால் உள்நாட்டில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். பொதுமக்களும் அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால், பாகிஸ்தானால் அதனை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும். அதனை தவிர்க்கும் விதத்தில் இந்தியா எல்லைப் பகுதியில் படைகளை கொண்டு வந்து குவித்து பதட்ட சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்குகிறது என்பதாக கருத்துகள் நிலவுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.