
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சாட்சியமளித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தின் போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் ஊழல்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அவரது பிரஸ்தாப சாட்சியம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற தினத்தில் லங்காதீப பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதனைக் கண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார். "இப்படியான செய்திகளை நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தால் நான் எந்த முகத்துடன் சென்று பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது? இதையெல்லாம் யார் செய்கின்றார்கள் என்று எனக்குத் தெரியும்..உங்களையெல்லாம் பிறகு கவனித்துக் கொள்கின்றேன்" என்றவாறு கடுமையாக அவர் தொலைபேசி மூலம் லங்காதீப பத்திரிகை ஆசிரியர் சிரி ரணசிங்கவை கடுமையாக ஏசியுள்ளார் என்று அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.