Monday, May 30, 2011

முன்னாள் போராளிகளில் 900 பேர் ஜூன் 5ஆம் திகதி விடுதலை – சந்திரசிறி!

முன்னாள் போராளிகளில் 900 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி விடுதலை செய்யப்படுவர். விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும்போது அவர்கள் சுயமாகத் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான சகல வசதிகளுடனுமே விடுவிக்கப்படுவர் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஞாயிற்றுக்கிழமை யாழில்வைத்துத் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளுள் 7,000 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆயிரம் பேரை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களுள் 900 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி விடுதலை செய்யப்படுவர். புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப சுயதொழில் முயற்சிக்கான சகல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய உணவுக்காக மட்டும் மாதாந்தம் 10 கோடி ரூபா செலவிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.