வடகிழக்கு தமிழர்களின் இனப்பிரச்சினையை உள் வீட்டுப்பிரச்சினை என்று கூறியுள்ள ஜனாதிபதி இதில் வெளிநாடுகள் தலையிடத் தேவையில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.இது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் அதற்கு வாக்களித்த வடகிழக்கு தமிழர்களையும் ஏமாற்றுவதாக அமைந்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மட்டக்களப்பு தாந்தாமலை கிராம மக்களை நேற்று(29.05.2011)தினம் சந்தித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்
வடகிழக்கு தமிழர்களின் இனப்பிரச்சினையை உள்வீட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முடியும் அதில் வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லை என அண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக்கருத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் அதற்கு வாக்களித்த வடகிழக்கு தமிழர்களையும் ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.
இந்தப்பிரச்சனையை உள்வீட்டுக்குள்ளேயே தீர்ப்பதாக இருந்தால் தந்தை செல்வா காலத்திலேயே தீர்த்திருக்க வேண்டும்.இன்று இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களையும்,ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளையும் கொன்று குவித்து 89000 மேற்பட்ட விதவைகளையும், 25000 மேற்பட்ட அங்கவீனர்களையும்,பல ஆயிரக்கணக்கான அனாதைகளையும் உருவாக்கிவிட்டு தமிழர்களுக்கும் எங்களுக்கும் உள்ள பிரச்சினை உள்வீட்டுப்பிரச்சினை என்றால் இதனை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே அரசாங்கத்திற்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையற்றிருக்கும் தமிழர்கள் அரசாங்கத்தின் இந்தக் கருத்துக் குறித்தும் அரசாங்கத்துடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பை குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.
ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இதுவரை இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட எந்த விடயங்களையும் நிறைவேற்றாத அரசு தமிழர்களின் இனப்பிரச்சினையை உள்வீட்டுப் பிரச்சினை என்று கூறியுள்ளமை அடுத்து நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பிரச்சினை குறித்து தொடர்ந்து “குண்டான் சட்டிக்குள் குதிரை ஓட்டவே” அரசாங்கம் முனைந்து கொண்டிருக்கின்றது இதற்கு தமிழ் மக்களோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ ஒருபோதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்பதை அரசு புரிந்தகொள்ள வேண்டும் என்றார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.