இலங்கையின் ஜனநாயகம், மனிதவுரிமைகள், சட்டத்தை நிலைநாட்டுதல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் கிறிம் தெரிவித்தார்.
இலங்கையில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் வகையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்து அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளி விவகாரக் குழுவிற்கு அனுப்பியுள்ள தீர்மானத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தில் நான்கு முக்கிய விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கு நிபுணர்கள் குழு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறை வேற்றவேண்டும் என அத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை ஆகியன கூட்டாக இணைந்து இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டும் எனவும் இத் தீர்மானத்தில் அவர் பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கு அந் நாட்டின் மீள் கட்டுமானம் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியன முக்கியமானவை என அவர் தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களை இலங்கையில் சுதந்திரமாகச் செயற்பட இலங்கை அரசாங் கம் அனுமதிக்க வேண்டும் எனவும் மைக்கல் கிறிம் தனது தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.