பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலைப் பார்வையிடுவதற்கும், தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்மான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வவுனியா விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவினர் இதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் சித்திரைப் புத்தாண்டையொட்டி முக்கிய இராணுவ அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருப்பதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்வதும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வவுனியா பபயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் பார்வையிடுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விஜயம் இனிமேல் எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரமும் அராசங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.