Tuesday, April 19, 2011

அவுஸ்திரேலியா செல்கிறார் மகிந்தா – வழக்கு பதிவுக்கு தயாராகின்றது புலம்பெயர் தமிழ் சமூகம்

இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரசுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தா ராஜபச்சாவின் இந்த பயணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும், அவருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை பதிவுசெய்ய முடியுமா என்ற வழிகள் தொடர்பாகவும் ஆராய்ந்துவருவதாக அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை போல் அல்லாது, முன்னரே வழக்கை பதிவு செய்தால் அவரின் பயணத்தை விரைவாக தடுத்துவிடலாம் அல்லது அவர் மீது விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரித்தானியாவை போல போர்க்குற்ற வழங்கை பதிவுசெய்யும் சட்டங்கள் அங்கு உள்ளதா என்பது தொடர்பில் ஒரு தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது.

எனினும் மகிந்தாவின் வரவுக்கு எதிராக பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் இடத்திற்கு முன்பாக பாரிய போராட்டங்களை நடத்த அவுஸ்திரேலியா புலம்பெயர் தமிழ் சமூகம் தயாராகின வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.