Monday, April 18, 2011

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ் சென்றவர் எரித்துக் கொலை!

புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. புன்னாலைக்கட்டுவன் வடக்கு உயர் பாதுகாப்பு வலைய எல்லைப் பகுதியில் புகையிலைத் தோட்டம் ஒன்றில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம் இன்று இரவு 8 மணியளவில் (17.04.11) அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகில் காணப்பட்ட கடவுச் சீட்டின்மூலம் கொல்லப்பட்டவர் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய வைத்திலிங்கம் செல்வகணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் யாரால் கடத்தப்பட்டார்? ஏன் கடத்தப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? அவரது தடயங்களை எரித்து அழிக்க முற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலதிக விசாரனைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர் என யாழில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.