Tuesday, April 19, 2011

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது: ATC பேச்சாளர் சாம் பாரி

சிறீலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் வரவேற்பதாக அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரசின் பேச்சாளர் கலாநிதி சாம் பாரி தெரிவித்துள்ளார்.

போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தடுப்பதில் அவுஸ்திரேலியா உட்பட அனைத்துலக சமூகம் தவறிழைத்துள்ளது. ஆனால் தற்போது சிறீலங்காவில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.


வர்த்தக்கத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை ஏற்படுத்தி சிறீலங்காவுக்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசை கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.