கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள பாதுகாப்பு பொலிஸார் அகற்றப்பட்டமை தொடர்பில் எந்தவிதமான தெளிவுபடுத்தலும் தரப்படாமல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் சமுகமளிப்பர் எனவும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
மாணவர் ஒன்றியம் எதிர்வரும் 19ஆம்திகதி பல்கலைக்கழக நிருவாகத்துடன் இது தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரி.கிருஷ்ணகாந்த தெரிவித்தார். கடந்த மாதம் 29 ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து மறுநாள் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பிலுள்ள பொலிஸார் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என மாணவர்கள் தெரிவித்துப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
ஆனால் அன்றைய தினம் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையையடுத்து துணைவேந்தர் தலைமையிலான பல்கலைக்கழக நிருவாகம் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை காலவரையறையின்றி இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.