சிங்கப்பூரில் நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்தனர் எனக் கூறப்படும் தகவல் பொய்யானது; நாம் அவர்களைச் சந்திக்கவில்லை.இப்படிக் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றச் சென்றிருந்தனர்.இந்தக் கருத்தரங்கில் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.
முரளிதரனின் கருத்தை முற்றாக மறுத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அவர் குறும்புத்தனமாகக் கருத்துவெளியிட்டுள்ளார். நாடு கடந்த தமீழீழ அரசின் பிரதிநிதிகள் எவரையும் நாம் சந்திக்க வில்லை.அரசுக்கும் எமக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிலேயே பங்கு பற்றினோம் என்றார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.