Sunday, April 24, 2011

சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார்.

ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புட்டபர்த்தி சாய்பாபா (85) இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 85 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.28 மணிக்கு சாய்பாபா இறந்ததாக சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்தனர்.

இவருக்கு உலகெங்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் கடந்த மார்ச் மாதம் 28 -ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சத்திய சாயி பாபா வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

இவரின் சுய அறிவிப்பின் மூலம் இவர் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் என இவரின் ஆதரவாளர்களால் நம்பப்படுகின்றது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம். பகவான் பாபா இவர்களுக்கு 8வது குழந்தையாகப் பிறந்தார்.

பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தனது மகிமைகளை வெளிப்படுத்தினார். தெரு நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர்கள் வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தானாகவே இசைத்தன.

சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்கு சத்ய நாராயணன் என பெயர் சூட்டினர். இவரின் பிறப்பு சாதாரண மனிதர்களை போல் இல்லை, அதாவது பிரசவத்தின் மூலமாக இல்லாமல் பிரவேசமாக இருந்தது.

ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் ஈஸ்வரம்மா கூறினார்.

இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் இலட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திர முதல்வர்,அமைச்சர்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.