Tuesday, April 12, 2011

இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பா ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இன்று பான் கீ மூனிடம் கையளிப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தனக்கு ஆலோசனை வழங்க, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்.கீ.மூன் நியமித்த நிபுணர்கள் குழு இன்று தனது அறிக்கையை ஐ.நா செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை முதலில் ஐ.நா செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், கையளிக்கப்பட்ட பின்னர், அதனை பகிரங்கப்படுத்துவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழு, கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில், இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி தருஸ்மன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை குறித்து, அரசாங்கம் தொடர்ந்தும் தனது அதிருப்தியை ஐ.நா செயலாளரிடம் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.