Wednesday, April 13, 2011

இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து பேசும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை வரலாறு முழுவதும் அமெரிக்கா மீதே போர் குற்றங்கள்

இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து பேசும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை எனவும் வரலாறு முழுவதும் அமெரிக்கா மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இது குறித்து தாம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியதாக கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற கொலைகள் குறித்து பேசப்பட்டு வரும், நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரிக்காவுக்கு எந்த உரிமையுமில்லை. வரலாற்றை உற்று நோக்கும் போது, அமெரிக்கா மீது இதனை விட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு போர் குற்றங்கள் அல்லது வேறு வழிவகைகள் தொடர்பாக இலங்கை மீது குற்றம் சுமத்தினால், அதற்கு எதிராக குரல் கொடுப்போம், நாடு என்ற வகையில், இந்த குற்றச்சாட்டுகளை ஒன்றாக இணைந்தே எதிர்க்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சினையை நாட்டிற்குள் தீர்த்து கொள்ள முடிந்தால், அதனை எம்மால் எதிர்க்கொள்ள முடியும். இதனை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி மீதோ, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீதோ துரோகிகள் என முத்திரை குத்துவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. நாட்டிக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு நாட்;டிற்குள் தீர்வுகளை காணவேண்டும் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.