Saturday, April 23, 2011

விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு - பான் கீ மூனின் அறிக்கை : கோத்தபாய சீற்றம்

பிரபாகரனின் தேவைதான் பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார்.


பான் – கீ – மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கூறும் வரை பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல. இலங்கையில் உள்ள எவருக்கும் எதிராக பான் – கீ – மூனின் அறிக்கை எதனையும் செய்ய முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தேவைக்கு அமையயே நிபுணர்கள் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை. நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஸ்ய தூதுவர் தெரிவித்தார்.


பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது. இலங்கையை அடிப்படைவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், விடுதலைப்புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.


அதேவேளை, கே.பி குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய மிகவும் சிரமப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் எனவும் அவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.