ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையை வசித்து, அதில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு சிறீலங்கா அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அறிக்கையையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு ஒன்றை இந்தியா அமைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதனை இந்திய அரசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
அறிக்கை தொடர்பாக கவனமாக ஆராய்ந்த பின் இந்திய அரசாங்கத்தினால் இராஜதந்திர ரீதியான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படுமென்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையினால் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிபுணர் குழுவின் அறிக்கை போர்த்துக்கல், இந்தியா உள்ளிட்ட பல தரப்பினருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் நிபுணர் குழு அறிக்கை கடந்த பன்னிரண்டாம் திகதி அதன் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இதுவரை அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே ஐ.நா. சபையுடன் தொடர்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று அதன் பிரதியொன்றை போர்த்துக்கல் நாட்டு இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளது. மேலும் பல தொண்டு நிறுவனங்களும் அதன் பிரதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கையும் ஆரம்பத்தில் த ஐலண்ட் பத்திரிகைகக்கு மட்டும் ஆரம்பத்தில் கசிய விடப்பட்டது. அதன் பின் அங்கிருக்கும் சில ஊடகவியலளார்கள் பணத்துக்காக அதனை ஏனைய ஊடகங்களுக்குக் கசிய விட்டனர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.