Sunday, April 24, 2011

ரா.சு.நல்லபெருமாள் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம்

தமிழ்நாட்டின் எழுத்துலக மேதைகளில் ஒருவரான, நெல்லை தந்த நல்முத்து, ரா.சு.நல்லபெருமாளது மறைவு தமிழக எழுத்தாளர்களை மட்டுமல்ல, தமிழக வாசிப்பாளர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து வாசகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது என்பதுதானே நமக்கு இதுவரை தெரியும். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை இந்த எழுத்தாளனது மரணம் எப்படி பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா?

ரா.சு. நல்லபெருமாளின், ” கைக்குள் ஈரம்” என்ற புதினம் அந்த போராளி பிரபாகரனை குலுக்கி இருந்தது. அதை தனது கைப்பட பிரபாகரனே, எழுத்தாளர் ரா.சு.நல்லபெருமாளுக்கு எழுதி பாராட்டியிருந்தார். யாழ்ப்பனவாசிகள் எப்போதுமே இலக்கிய பற்று அதிகம் கொண்டவர்கள். வாசிப்பு அவர்களது கைவந்த கலை. தமிழ் இலக்கியம் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. அதிலும் மட்டகிளப்பு வாசிகள் தங்களது, அருகே நீரும், அதில் துள்ளும் மீன்களையும் பார்த்து பார்த்து பரவசமடைபவர்கள். அதை எழுதி ரசிப்பவர்கள். யாழ் குடாநாட்டில் பிறந்து, மட்டக்கிளப்பில் வளர்ந்த பிரபாகரனுக்கு கேட்கவா வேண்டும்.

அந்த போராளிக்கு உள்ளே ஒரு மனிதம் முழித்துக்கொண்டே இருந்தது என்பதால்தான் ரா.சு.நாவின் எழுத்தை, கல்லுக்குள் ஈரத்தை அந்த போராளி கண்டிருக்கிறார்.பிரபாகரனது கடிதத்திற்கு இந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் நல்லபெருமாள், பதில் கடிதம் அனுப்பினார். அப்போது பிரபாகரன் அரசால் தேடப்பட்டுக்கொண்டிருந்த நேரம். காடுகளில் கலங்களை அமைக்க பயணம் செய்து கொண்டிருந்த காலம். அவர் அருகே அப்போது, உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் இருந்திருக்கிறார். ரா.சு.நல்லபெருமாள் தனக்கு எழுதிய கடிதத்தை, போராளி பிரபாகரன், இந்த கவிஞரிடம் உள்ள நெகிழ்வோடு எடுத்து காட்டியிருக்கிறார்.

கடிதம் பிரபாகரனுக்கு வந்து சேர்ந்த நேரத்தில், காடுகளில் அவருடன் தானும் பயணத்தில் இருக்கும் போது, அதை வாங்கி படித்து காட்டினார் பிரபாகர என்பதை அந்த உணர்ச்சி கவிஞர் கூறும்போது அவர் கண்கள் மட்டுமல்ல, நமக்கும் கண்கள் பணித்திவிட்டன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.