Thursday, April 14, 2011

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் இழந்து போன எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உரிமைப் போராட்டமே இன்றைய அவசியத் தேவை

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் எமது மக்களின் இழந்து போன உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டமே இன்றைய அவசியத் தேவையாகும்.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதியதோர் மாற்றத்தை உருவாக்க சித்திரைப் புதுவருடம் வழிவகுக்க வேண்டும்

'யுத்தம் முடிவுக்க கொண்டுவரப்பட்டு இரண்டு வருட காலம் கழிந்து போகின்ற இன்றைய நிலைமையில், அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை.

யுத்தக் கொடுரங்களினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இன்னமும் இன்னல்களையும், அவதிகளையும் எதிர்கொண்டவண்ணமே தமது வாழ் நாட்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை எமது பிரதேசங்களுக்கு வரும் எவராலும் அறியக் கூடியதாகவுள்ளது.

அதேநேரம் வடக்கு - கிழக்கில் யுத்தக் கொடுரங்களால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே காணப்படுகின்றன.

ஆனால் தேவைக்கு அதிகமான அபிவிருத்திகள் தேவையற்ற பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது எமக்கு கவலையளிக்கின்றது.

இதனை நாம் இன ரீதியான சிந்தனையுடன் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற ரீதியில் செயற்பட வேண்டுமென்பதே எமது உண்மையான கோரிக்கையாகும்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் எமது மக்களின் இழந்து போன உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டமே இன்றைய அவசியத் தேவையாகும்.

அதற்கான அரசியல் வழி நடத்தலை கட்டியெழுப்புவதற்கான அரசியல் வழிநடத்தலே இன்றைய அவசியத்தேவையாகும்.

இதற்கான முன்னெடுத்தல்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

எனவே புதியதோர் அரசியல் மாற்றத்தினை உருவாக்க வழிவகுக்க வேண்டுமென்று உறுதியுடன் நம்புகின்றோம்.

சித்திரைப் புதுவருடம் கடந்த கால துன்ப நிகழ்வுகளை களைந்தெறிந்து தமிழர் வாழ்வியலில் புதியதோர் மாற்றத்தை உருவாக்க வழிவகுக்க வேண்டும்' என அவரது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.