Tuesday, April 26, 2011

விமல் வீரவன்ஸ தலைமையில் திரளுகிறார்கள் சிங்களவர்கள்! ஐ.நா.அறிக்கைக்கு எதிராக மீண்டும் கொடிகள் கொடும்பாவிகள் எரிக்க ஏற்ப்பாடு: மேதின ஊர்வலங்களில் திட்டமாம்.

மே தினத்தன்று ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, கொழும்பில் நான்கு இடங்களில் இருந்து அரசதரப்பின் பேரணிகள் வந்து தலைநகரையே அதிரவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மருதானை, மாளிகாகந்தவில் இருந்து அமைச்சர் வீரவன்ஸவின் தலைமையில் இடம் பெறவுள்ள பேரணி ஐ.நாவுக்கு எதிரான முழக்கங்களுடன் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் வலிமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டிருந்தார். ஜனாதிபதியின் ஆணையின்படி ஆளும்தரப்புச் சார்பாக நவசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் ராஜகிரியவில் இருந்தும், அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் நாரஹேன்பிட்டியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் கம்பல் பார்க்கில் இருந்தும் பேரணிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் பேரணிகள் அனைத்தும் அந்த அந்தக் கட்சிகளின் தொழில் சங்கங்களின் உறுப்பினர்களை இணைத்தே நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் பிரச்சினைக்கு இந்தப் பேரணிகளில் முக்கிய இடம் வழங்கப்படும். அதேசமயம் ஐ.நாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்படும். விமல் வீரவன்ஸ ஏற்பாடு செய்யும் பேரணியில் ஐ.நாவுக்கு எதிரான பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்கள் சுலோகங்கள் மற்றும் ஊர்திகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.