Monday, April 25, 2011

திரு.நடேசன், திரு.புலித்தேவன் ஆகியோருடன் 300 சிவிலியன்களும் சரணடைந்துள்ளனர்

அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் சரணடைதல் மற்றும் அவர்கள் சிங்களப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிபுணர் அறிக்கையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பீடம் 300 பொதுமக்களுடன் நிபந்தனையற்ற முறையில் சரணடைய விடுப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த செய்தியினை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம் ஆகியோருக்கு தெரிவித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை சரணடைதல் பற்றிய செய்தியினை இலங்கை அமைச்சர் பசில் இராஜபக்‌ஷ மற்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய அவர்களுக்கும் தெரியப்படுத்தியமையும் இவ்விருவரும் சரணடைதலை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளனர். இதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உறுதிப்படுத்தலின் பின்னர் திரு நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் 18 ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு வெள்ளைக்கொடியுடன் பொதுமக்கள் சகிதம் 58 வது சிங்கள இராணுவ டிவிசனை நோக்கி சரணடைய சென்றனர். இதே வேளை கேணல் ரமேஸ் அவர்களும் பிறிதொரு குழுவினருடன் சரணடைய சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் பிபிசி நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யபப்ட்டுள்ளதாக செய்தி ஒளிபரப்பியது.
அரசாங்கம் திரு நடேசன் மற்றும் புலித்தேவன் தொடர்பாக பல்வேறு கதைகளைக்கூறினாலும் அவர்கள் நிபந்தனையற்ற சரணடைதலிற்கு ஒத்துக்கொண்டதும் அவர்களின் உயிர்ப்பாதுகாப்பிற்கு கோத்தபாய வாக்குறுதி அளித்ததும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளால் பதிவாகியுள்ளது. அடுத்ததாக திரு நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர்கள் சரணடையும் போது மூன்றாம் தரப்பு தேவை இல்லையென்றும் அவர்களை அனுமதிக்காததும் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கிட்டத்தட்ட 300 சிவிலியன்களும் சரணடைய சென்றுள்ளமை இராணுவம் கண்டபாட்டில் துப்பாக்கி பிரயோகம் செய்தமையினை பலர் நேரில் கண்டுள்ளனர். இவர்களின் சாட்சியங்களும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு நிபுணர் குழு அறிக்கையினை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்ரான் செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.