Thursday, December 02, 2010

அம்பலமாகியிருக்கும் மற்றொரு ஆதாரம் : தளபதி ரமேஷை விசாரிக்கும் இராணுவத்தினர்

விடுதலைப் புலிகளின் படைத்தளபதிகளில் ஒருவரான ரமேஷ் அவர்கள் உட்பட முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவன் அவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாக முன்பு செய்திகள் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்த உண்மை.


ஆனால் பிரித்தானியாவின் ரெலிகிராப் மற்றும் இன்டிபென்டன் ஆகிய பத்திரிகைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையணியின் தளபதிகளில் ஒருவராக ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த போது ராணுவத்தினரால் விசாரிக்கப்படும் காணொளியை வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளி வெளிவரும் பட்சத்தில் இலங்கை அரசு உலக அளவில் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.