இலங்கையின் போர்குற்றங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரின் இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுமே பொறுப்பு என அமெரிக்க தூதுவர் பெற்றீசியா பியூட்டினஸ் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை பியூட்டினஸ் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த வருட ஜனவரி மாதம் 15 ஆம் திகதியன்று, எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது
இதேவேளை அமெரிக்காவின் 2010 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை மீறல் அறிக்கையில் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றங்களையும் பியூட்டினஸே இடம்பெறச்செய்ததாக விக்கிலிக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை தாம் பதவிக்கு வந்தால், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்கப்போவதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா, அமெரிக்கா தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸிடம் இரகசியமாக உறுதியளித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார முகாமையாளர் இந்த உறுதிமொழியை தனக்கு தனிப்பட்ட ரீதியில் அளித்ததாக பியூட்டியனிஸ் அமரிக்க இராஜாங்க திணைக்கத்திற்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது
இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் தாம் வெற்றிபெற்றால் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வைக் காணுவதாக சரத் பொன்சேகா கூறியிருப்பதாக பியூட்டினஸ் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், தம்மிடம் இலங்கையின் தற்போதைய நடைமுறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்
எனினும் அது எவ்வாறான தீர்வு என்பதை அவர் கூறவில்லை என்றும் பியூட்டினியஸ் தமது உயர்அதிகாரிகளுக்கு கூறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.