Tuesday, July 06, 2010

இலங்கை அகதிகள் தொடர்பிலான வீசா தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது

இலங்கை அதகிகளுக்கான அந்தஸத்து வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை, அவுஸ்திரேலியா இன்று நீக்கியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா கில்லர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் புதிய பிராந்திய கொள்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குற்பிட்டுள்ளார். இதன்படி, கிழக்கு திமோர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு உடன்பாடொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிள்ளார்.

இந்த உடன்பாட்டின் கீழ், குறித்த இரண்டு நாடுகளிலும் அகதிகள் மத்திய நிலையங்கள் நிறுவபப்படவுள்ளன. அவுஸ்திரேலியா நோக்கி வருகின்ற இலங்கை அகதிகள், நேரடியாக அந்த மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். பின்னர் அந்த மத்தியநிலையம், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு அகதி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

இதேவேளை இலங்கையர்களுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான தடை குறித்து, தொடர்ந்து ஆலோசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.