இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையில் நிலமைகள் முன்னேற்றமடைவதன் காரணமாக இலங்கையர்களுக்கு தன்னியக்கமாகவே அகதிகள் அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்றும், தனிப்பட்டவர்களின் நிலமைகளை ஆராய்ந்து அகதி அந்தஸ்து கொடுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம்கோரும் இலங்கையரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை என இடைநிறுத்தியிருந்தது. அகதிகளுக்கான யூ.என்.எச்.சி.ஆர். நாடுகளுக்கான தனது ஆலோசனையை புதுப்பிக்கும்போது தனது தீர்மானத்தை மீளாய்வு செய்வதாக அவுஸ்திரேலிய அரசு கூறியிருந்தது. இதேவேளை,தனது மீளாய்வு செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை நேற்று இரவு ஐ.நா. வெளியிட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவும் தனது நிலைப்பாட்டை மாற்றலாம்.
ஐ.நா விடுத்துள்ள அந்த அறிக்கையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சில பிரிவுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் அபாயம் தொடர்ந்தும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.