Tuesday, July 06, 2010

பாலஸ்தீன அரசு குழுவுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை சந்திப்பு

பாதிக்கப்பட்ட இனங்களுக்கு இடையே உறவுகள் உருவாக்கப்படவேண்டும் ! கிளிச்சி தமிழ் சங்கத்தின் (Clichy Franco Tamil) ஏற்பாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதி 05-07-2010மாலை பாலஸ்தீனத்தில் இருந்த வந்திருந்த குழு (Délégations)வுடன் கிளிச்சி (Clichy) நகர பிதாவின் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது திரு கில்லஸ் கட்டுவ (Mons Gilles Cattoire) கிளிச்சி நகர பிதா பேசும்போது காசாவில்(Gaza) இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான, சகல விதமான சட்டத்துக்கு புறம்பான ஆயுதங்களை பாவித்து படுகொலைகளை செய்துகொண்டிருந்த போது, அதே நேரத்தில் இலங்கையில் ஸ்ரீ லங்கா அரசு இஸ்ரேல் ராணுவத்தை விட படுமோசமான இனப்படுகொலைகளை செய்துகொண்டு இருந்தது என்றார்.

அதே நேரத்தில் பாலஸ்தீன குழுவின் (Délégations) தலைவர் திரு ஹனி அழ ஹேக் (Mons Hani Al-Hayek) பேசும் போது, ஸ்ரீ லங்கா வில் நடந்த படுகொலைகள் உலக கண்களுக்கு மறைக்கப்பட்டு, செய்தியாளர்கள், அந்நிய நாட்டு அரசு, அரசு சார்பற்ற மனித நேய குழுக்களை வெளியேற்றி விட்டு நடைபெற்றது என்றும், அதனால் அங்கே நடைபெற்றது எல்லோரினதும் பார்வைக்கு மறைக்கப்பட்டது என்றும், பாலஸ்தீன மக்களின் ஆதரவு இலங்கை தமிழ் மக்களுக்கு உண்டு என்றும் தாம் பாலஸ்தீனம் திருப்பி செல்லும் போது தம் தலைவர் திரு முஹம்மத் அப்பாஸ்வுடன் ( Mons Mohamed Abbas) பேசுவதாகவும் கூறினார்.

தமிழீழ மக்கள் பேரவையின் தலைவர் உரையாடும் போது, எமது நிலையும் பாலஸ்தீன மக்களின் நிலையும், இரண்டும் ஒப்பிட்டு பார்க்க கூடியது என்றும் பாலஸ்தீன மக்கள் 1947யில் தமது நாட்டை இழக்க துவங்கினார்கள் என்றும் தமிழர்கள் 1948யில் இருந்து தமது உரிமைகளை இழக்க துவங்கினார்கள் என்றும், காசாவில்(Gaza) நடைபெற்ற படுகொலைகள், மனித நேய கப்பலில் நடைபெற்ற அட்டுழியம் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் பாதிக்கப்பட்ட இனங்களுக்கு இடையே உறவுகள் உருவாக்கப்படவேண்டும் என்று கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு நடைபெறும் கஷ்டங்களை நாமும் பார்த்து அவர்களின் வேதனைகளில் பங்கு கொள்கிறோம் என்றும் எங்கள் ஆதரவு எப்போதும் பாலஸ்தீன மக்களுக்கு இருக்கும் என்றும் கூறினார்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.