Sunday, June 06, 2010

பாதுகாப்புப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட மாட்டாது! - Claude Heller

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பான மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்சிக்கோவின் நிரந்திரத் தூதுவரும், பாதுகாப்புப் பேரவைக்கு அம் மாதம் தலைமை வகிப்பவருமான Claude Heller, இம் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் பொது மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் முக்கிய விடயமாக இருப்பினும், பாதுகாப்புப் பேரவையின் ஜுன் மாத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இது தொடர்பான விவாதம் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அது குறித்து தன்னிடம் தனிப்பட்ட அபிப்பிராயம் உள்ளதாக அவர் பதிலளித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும், ஆனால் பாதுகாப்புப் பேரவையின் இம் மாதக் கூட்டத்தில் இது குறித்து விவாதிப்பது தொடர்பில் நிகழ்ச்சி நிரலில் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த வருடம் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை கூடியிருந்தது.

ஆனால், பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா அரசின் நேச நாடுகள் தமது பலத்தைப் பிரயோகித்து சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.