Sunday, June 06, 2010

இலங்கையில் தூதரகங்களை திறக்கும் இந்தியாவின் இராஜதந்திரம்! - ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இலங்கையில் தமிழ், சிங்கள மக்களிடையே சம நிலையான அணுகு முறையை மேற்கொள்வதற்கான முனைப்புக்களில் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த முனைப்புக்களின் ஒரு நடவடிக்கையாகவே அம்பாந்தோட்டையில் உதவித் தூதரகம் ஒன்றை இந்தியா திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இந்திய உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா கடைப்பிடிக்கும் அணுகுமுறையை போல், சிங்கள மக்களுடனான உறவையும் வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா இந் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மேலோங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தியா இத்தகைய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து இவ்வூடகம் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.
'இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாடு தமிழ் மக்களை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்ற கருத்துள்ள நிலையில் தமிழ், சிங்கள மக்களை சமனாக அணுகும் முறையினை இந்தியா கடைப்பிடிப்பதற்கு சீனாவும் ஒரு காரணமாகும்

யாழ்ப்பாணத்திலும், அம்பாந்தோட்டையிலும் துணைத் தூதரகத்தை ஒரே நேரத்தில் திறப்பதந்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாக
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இத் தூதரகங்களை எப்போது திறப்பது என்ற முடிவு எடுக்கப்படும் போது பிராந்திய மற்றும் ஏனைய காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை அடுத்தே, அப் பகுதியில் துணைத் தூதரகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற முடிவை இந்திய உள்துறை அமைச்சு எடுத்திருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானில் சீனா மேற்கொண்டு வருகின்ற துறைமுக கட்டுமாண நடவடிக்கைக்கு சமனாக அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமாணம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வர்த்தகக்; கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் கொள்கலன்கள் மற்றும் படைத்துறைக் கலங்கள் போன்றனவற்றின் இடைத்தங்கல் தளமாகவும் இத் துறைமுகம் அமையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது இருப்பினை வலுப்படுத்தும் எண்ணத்துடன் பிராந்திய நாடுகளில் சீனா மேற்கொண்டு வரும் செயல் திட்டங்களில் அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மாணமும் இடம்பெறுகிறது' என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை குறித்து கொள்கை வகுப்பாளர்களிடம் பரவாலான விவாதங்கள் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.