சிங்கப்பூர் பிரஜை: எவ்வாறு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற நூலிலேயே சிங்கப்பூர் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போருக்குப் பிந்தைய நிலைமைகள் குறித்து அவர் குறிப்பிடுகையில் தற்போதைய ஜனாதிபதி நினைக்கிறார் தான் பிரச்சினையைத் தீர்த்து விட்டதாக. தமிழ்ப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் அவ்வளவு தான் என்று. நான் அவருடைய பேச்சுக்களை வாசித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. என்னால் அவருடைய மனதை மாற்ற முடியாது என்று சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ அதில் தெரிவித்துள்ளார்.
லீ குவான் யூ நவீன ஆசியாவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவர் என்று புகழப்படுபவர். ஆசியப் பொருளாதாரத்தின் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர்களில் ஒருவர். அது தான் மேற்கிலிருந்து கிழக்கிற்கு வரலாற்று ரீதியான அதிகாரப் பெயர்வை ஏற்படுத்தியது என்று சொல்லப்படுகிறது.
தூரநோக்குடைய வெற்றிகரமான ஒரு தலைவராக அவர் வர்ணிக்கப்படுபவர். சீனாவின் புதிய எழுச்சியை முன்னரே கணிப்பிட்டுக் கூறிய ஒருவர் என்றும் அவர் புகழப்படுகிறார். அவருடைய கருத்துக்கள் ஆளும் வட்டாரங்களிலேயும், உயர் கொள்கை வகுப்பாளரிடையேயும் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.
இந்த நூல் பேராசிரியர் ரொம் பிளேட் என்பவரால் சிங்கப்பூர் பிரதமருடன் உரையாடி எழுதப்பட்டுள்ளது. ரைம்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மார்ஷல் கவீன்டிஷ் இதனை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் ரொம் பிளேட் லொஸ் ஏஞ்சல் ரைம்ஸ் பத்திரிகையில் தொடர்ச்சியாக ஆசிய விவகாரங்கள் பற்றி எழுதி வருகிறார். அமெரிக்கப் பத்திரிகை உலகில் மிக நீண்டகாலமாக தொடர்ந்து வெளிவரும் பத்தி அவருடையது. அத்தோடு அவர் விடுதலைப் புலிகள் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: GTN







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.