Thursday, June 03, 2010

இலங்கையின் கடற்படைப் பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ‐ கோதபாய ராஜபக்ஷ தெரிவிப்பு.


தமிழீழ விடுதலைப் புலிகள் மரபு ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் மீண்டும் புலிகளின் செயற்பாடுகள் தலைதூக்குவதனை தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலி அச்சுறுத்தல் மட்டுமன்றி பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் வலுவாக அமைய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னராக இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படுவதனை தடுப்பதற்கு கடற்பாதுகாப்பு மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடல் வழியாகவே அயுதக் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத செயற்பாடுகள் ஆரம்பமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாத உலக சமூகம் தற்போது அவர்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பீடு செய்யும் போது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பலம் மிகவும் குறைவானதென்பது கவனிக்கப்பட வேண்டியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுப்பதற்கு இலங்கை உலக நாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் மீன் பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை தற்போதைக்கு பூரணமாக களைய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.