சீனாவின் துணைப் பிரதமர் ணூயபெ னுநதயைபெ எதிர்வரும் 10ஆம் திகதி சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கவுள்ள இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் சபாநாயகர் சாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்புக்குச் செல்லும் சீன துணைப் பிரதமரின் தலைமையிலான 30 பிரதிநிதிகள் கொண்ட குழு சிறிலங்காவுடன் இரு தரப்பு நலன்கள் சார்ந்த அரசியல், பொருளாதார, இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.
இவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், அக் கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் முக்கிய தலைவர்களில் ஓருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.