தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இது குறித்து தெரித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்தல் மற்றும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பீற்றர் ஹெய்ஸ் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் பிரதிநிதிகளிடம் தாம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயாந்து வாழ்கின்ற தமிழ் மக்களைவ வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், முதலீடுகளிலும் பங்குபற்ற வைப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு வழங்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் இச் சந்திப்பில் சிறிலங்காப் பிரதமரிடம் கூறியுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.