இந்தியாவுக்கு தேவையான வகையில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பான யோசனைகள் உள்ளிட்ட அரசியல் சாசனத் திருத்தத்தை விரைவில் அமுல்படுத்துவது, சீபா உடன்படிக்கை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பொருளாதார நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்து வெளியிட்டுள்ளது.அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடைபெற்றுள்ளதுடன் அந்த பேச்சுவார்த்தை தொடர்பாக எவ்வித தகவல்களும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து நடைபெறவுள்ள சில பேச்சுக்களில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். அதேபோல் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இருவரும் இந்திய அரசாங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள உள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தன் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் சாசனத் திருத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் லங்கா இரிதா தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிப்பதற்க்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக சம்பந்தனும் உறுதி வழங்கியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் இலங்கை மீது இந்தியாவின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாகவும் லங்கா இரிதா பத்திரிகை மேலும் கூறியுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.