Sunday, June 06, 2010

மகிந்தாவின் புதுடில்லி விஜயம்! – தமிழ்நாட்டில் வெடிக்கிறது எதிர்ப்புக் குரல்!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வடிப்படையில், எதிர்வரும் 8ஆம் திகதி சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணைத்தூதரகம் முன்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இதே நாள் தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டத்தின் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

இதேபோன்று, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மாநிலம் தழுவிய ரீதியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளும் எனவும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந் நிலையில், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனித நேயமில்லாத மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

8ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அறப்போராட்டத்தில் மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.