வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் சிறீலங்கா அரசு போர்க் குற்றம் புரிந்ததா என்பதைக் கண்டறிந்து ஆலொசனை வழங்கும் நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான்-கி மூன் நியமித்துள்ளமை சிறீலங்கா அரசை பாரிய சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இந்தக் குழு நியமிக்கப்பட்ட உடனேயே அவசரமாக வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பிரீசை அழைத்த சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பான்-கி மூனால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரீவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தக் குழவிற்குத் தலைமைதாங்கும் மர்சுகி டறுஸ்மன், சர்சைக்குரிய வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக தற்பொழுது கடமையாற்றி வருகின்றார்.
இவர்கள் தமது அறிக்கையை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான்-கி மூனிற்கு சமர்ப்பிக்க இருப்பதாக ஏ.எப்.பி தகவல் வெளியிட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.