Wednesday, June 23, 2010

மட்டு சிங்களக் குடியேற்றங்களை த,தே.கூட்டமைப்பு தடுக்க வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகரை உட்பட மட்டக்களப்பின் வளம்மிக்க கரையோரப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, பாசிக்குடாவிலும் சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சுனாமியின்போது அழிக்கப்பட்ட பாசிக்குடா சுற்றுலா விடுதியை மீள அமைக்கவெனக்கூறி நேற்று பொருண்மிய அபவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கள மக்களை தமிழ்க் கிராமமான பாசிக்குடாவில் குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதுடன், துணைப்படைக் குழுக்களும் இதற்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றன. நேற்றைய நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சருடன், கிழக்கின் முதலமைச்சரும், துணைப்படைக் குழுத் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் கலந்துகொண்டிருந்தார்.

சுனாமியின்போது பாசிக்குடாவில் 300 பேர்வரை பலியானதுடன், அங்கிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து பட்டியடிச்சேனையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அங்கு தமது வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மீண்டும் பாசிக்குடா சென்றுள்ளனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கா உதவித் தொகையைக்கூட வழங்காது இழுத்தடிக்கும் அரசு, அவசர அவசரமாக சுற்றுலா விடுதி அமைப்பதற்கான தேவை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடிக்கடி செல்லும் மகிந்த அரசின் அமைச்சர்கள், தமிழர் பூர்வீகப் பிரதேசங்களில் சிங்கள மக்களை மீளக் குடியேற்றுவது பற்றி படை உயரதிகாரிகளுடன் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.