Wednesday, June 23, 2010

செம்மொழியாகும் தகுதி அனைத்தும் தமிழுக்கு உண்டு : மாநாட்டில் முதல்வர் கருணாநிதி _

ஒரு மொழியைச் செம்மொழியாகக் கூற, தேவைப்படும் 11 தகுதிகளை மட்டுமின்றி, அதற்கு மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி, தமிழ் மொழி என்பதை தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர்.

உலகின் முதலாவது தாய் மொழியாகத் தமிழ் மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆரம்ப விழாவுக்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றினார்.

தமிழ் மொழியின் தொன்மையை விளக்கும் வரலாற்றுச் சான்றுகளைப் பட்டியலிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், "வணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும், தமிழ் உலக நாடுகளில் அறியப்பட்ட மொழியாக உருவானது. அதன் தொன்மையாலும், தனித்தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், உலகின் முதலாவது தாய் மொழியாக - தமிழ் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழியைச் செம்மொழியாகக் கூற, தேவைப்படும் 11 தகுதிகளை மட்டுமின்றி, அதற்கு மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி, தமிழ் மொழி. இதனைத் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில்,ஏன், தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் கூட ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவும் குறையாமல் இந்த அவனியில் வாழ்ந்து வருகிறது தமிழ் மொழி. இனி எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு - கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும், தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவும் இந்த மாநாடு பெரிதும் உதவும்" என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.